அகமண வழக்கம் பிராமணர்களிடம் பிறந்தது. பின்னர் ஏனைய பிராமணர் அல்லாத உட்பிரிவினரும் அல்லது வர்க்கத்தினரும் முழு விருப்பத்தோடு பின்பற்றத் தொடங்கியதால் அவர்களும் அகமண வழக்கத்தினராயினர். இந்த வகை பிறரைப் பார்த்து அவர்களைப் போல வாழும் தொற்றுநோய் பழக்கம் அனைத்து உட்பிரிவினரையும் வர்க்கத்தாரையும் பிடித்துக் கொண்டதால் கலந்து பழகி வந்தவர்கள் பாகுபாடுகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்து தனித்தனி சாதிகளாயினர். பிறரைப் பார்த்தொழுகும் ‘போலச் செய்தல்’ என்னும் மனப்போக்கு மனித மனத்தில் ஆழமாக இடம் பெற்ற ஒன்றாகும்.

