வரலாறு நெடுங்காலமாக எழுதப்படாமல் இருந்தபோதிலும் சாதிஅமைப்பு மிகத்தொன்மையானது என அறிய முடிகின்றது. பழம்பொருட்களின் கற்படிமங்கள் (fossils) தம் வரலாற்றைப் புலப்படுத்துவதுபோல, பழக்கவழக்கங்களும் நெறிமுறைகளும் எழுதப்படாதவையாயினும் சமூக அமைப்புகளில் இவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

