ஆனால் அத்தியாவசியமான தேவைகளில் ஒரு மனிதன் மற்றொருவரைச் சார்ந்து இருக்கும்படி ஏன் செய்ய வேண்டும்? கல்வி ஒவ்வொருவருக்கும் அவசியம். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் சாதனங்கள் ஒவ்வொருவருக்கும் அவசியம். ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பாதுகாத்து வைத்துக் கொள்வதற்கு இவை மிகவும் அவசியமானவை. கல்வி அற்றவனாக, ஆயுதம் இல்லாதவனாக இருக்கும் ஒருவனுக்கு அண்டை வீட்டான் கற்றவனாக, ஆயுதம் தரித்தவனாக இருப்பதால் என்ன லாபம்? இந்தத் தத்துவமே முழுவதும் அர்த்தமற்றது.

