முதலாவதாகவும் முக்கியமானதாகவும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்து சமூகம் என்பதே வெறும் கற்பனை என்பது தான். ‘இந்து’ என்ற பெயரே ஓர் அன்னியப் பெயர்தான். இந்த நாட்டு மக்களிடமிருந்து தங்களைத் தனித்துக் காட்டுவதற்கு முகம்மதியர் வைத்த பெயர்தான் ‘இந்து’ என்பது. முகம்மதியரின் படையெடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும் ‘இந்து’ என்ற சொல் காணப்படவில்லை. இந்துக்களுக்குப் பொதுவானதொரு சமூகம் என்ற சிந்தனை இல்லாதிருந்த காரணத்தால் தங்களுக்குப் பொதுவானதொரு பெயர் தேவை என்பதை அவர்கள் உணரவில்லை. சொல்லப்போனால் இந்து சமூகம் என்ற ஒன்று இல்லை; இருப்பதெல்லாம் பல சாதிகளின் தொகுப்பே ஆகும்.

