சுயேட்சையாக நடமாடும் உரிமை, உயிரையும் உடம்பையும் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை என்ற அளவில் சுதந்திரம் என்பதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். உடம்பை நல்ல ஆரோக்கிய நிலையில் வைத்துக் கொள்வதற்கு, அவசியமான வாழ்க்கை வருவாய் பெறுவதற்காக சொத்து, கருவிகள், பொருள் வைத்துக் கொள்ளும் உரிமை என்ற அளவிலும் சுதந்திரம் என்பதற்கு ஆட்சேபம் இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு இருக்கும் திறன்களைப் பலனுள்ள முறையில் உபயோகித்து, நன்மை அடைவதற்குச் சுதந்திரம் கொடுத்தால் என்ன? சாதியை ஆதரிப்பவர்கள் இந்த அர்த்தத்தில் சுதந்திரம் கொடுக்க இணங்க மாட்டார்கள். ஏனென்றால், இது, ஒருவர் எந்தத் தொழிலைச் செய்வது என்பதை அவரே
...more

