ரயில் பயணங்களும் வெளிநாட்டுப் பயணங்களும் ஒரு இந்துவின் வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளாகும். சாதி வழக்கங்களை வாழ்க்கையில் எல்லாச் சமயங்களிலும் பின்பற்ற முடியவில்லை என்றால் அதைப் பின்பற்றுவதற்கே என்ன அவசியம் என்று இந்துவின் மனத்தில் இயல்பாகக் கேள்வி எழவேண்டும். ஆனால் ஒரு இந்து அப்படிக் கேட்பதில்லை. ஒரு இடத்தில் சாதியை மீறி நடந்துவிட்டு அடுத்த இடத்தில் அதைப் பின்பற்றுவார்.

