பிராமணன் பாதிக் கடவுளாகவும், அனேகமாக கண் கண்ட கடவுளாகவும் உள்ளான். அவன் ஒரு மாதிரியை (mode) முன்வைத்து அதற்கேற்ப மற்றவர்களைப் பின்பற்றும்படிச் செய்கிறான். அவனுடைய அந்தஸ்து கேள்விக்கிடமற்றது. நன்மை தீமைகளுக்கும் மகிழ்ச்சிக்கும் அவனே மூலகாரணமாகக் கருதப்படுகின்றான். வேதங்களால் தெய்வமாகத் துதிக்கப்படும் புரோகிதர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மக்களால் போற்றப்பட்டு வரும் பிராமணன் தன் முன் மன்றாடி நிற்கும் மனிதகுலத்தின் மீது தன்னுடைய செல்வாக்கினைச் செலுத்தாமல் இருக்கமுடியுமா?

