பிற மதத்தினரை இந்து மதத்தில் சேர்க்கும் ‘சுத்தி’ முறையை இயலாததாக்கும் அதே காரணங்களே ‘சங்கடன்’ (சங்காத்தம்) என்பதையும் (அதாவது ஒருமித்தல் அல்லது ஒருங்கமைவு என்பதையும்) இயலாத காரியமாக்குகின்றன. முகமதியரையும் சீக்கியரையும் போலன்றி இந்துவிடம் பயந்த சுபாவமும்-கோழைத்தனமும் காணப்படுகின்றன. இதன் காரணமாக அவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வஞ்சம், தந்திரம் என்ற இழிவான வழிகளைப் பின்பற்றுகிறார். இந்தக் கோழைத்தனத்தைப் போக்கவேண்டும் என்பதே ‘சங்கடனின்’ நோக்கம். ஆனால் சீக்கியர் அல்லது முகமதியர் தைரியம் கொண்டவராக, அச்சமற்றவராக இருக்கிறார் என்றால் அவருக்கு அந்த வலிமை எங்கிருந்து கிடைக்கிறது? நிச்சயமாக உடலுறுதியோ,
பிற மதத்தினரை இந்து மதத்தில் சேர்க்கும் ‘சுத்தி’ முறையை இயலாததாக்கும் அதே காரணங்களே ‘சங்கடன்’ (சங்காத்தம்) என்பதையும் (அதாவது ஒருமித்தல் அல்லது ஒருங்கமைவு என்பதையும்) இயலாத காரியமாக்குகின்றன. முகமதியரையும் சீக்கியரையும் போலன்றி இந்துவிடம் பயந்த சுபாவமும்-கோழைத்தனமும் காணப்படுகின்றன. இதன் காரணமாக அவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வஞ்சம், தந்திரம் என்ற இழிவான வழிகளைப் பின்பற்றுகிறார். இந்தக் கோழைத்தனத்தைப் போக்கவேண்டும் என்பதே ‘சங்கடனின்’ நோக்கம். ஆனால் சீக்கியர் அல்லது முகமதியர் தைரியம் கொண்டவராக, அச்சமற்றவராக இருக்கிறார் என்றால் அவருக்கு அந்த வலிமை எங்கிருந்து கிடைக்கிறது? நிச்சயமாக உடலுறுதியோ, உணவோ, உடற்பயிற்சியோ அதற்குக் காரணம் அல்ல. ஒரு சீக்கியருக்கு ஆபத்து ஏற்பட்டால் எல்லாச் சீக்கியர்களும் அவருக்கு உதவி செய்ய வருவார்கள் என்றும், ஒரு முகமதியர் தாக்கப்பட்டால் எல்லா முகமதியர்களும் ஒன்றுதிரண்டு அவரைக் காப்பாற்ற வருவார்கள் என்றும் அவர்கள் உள்ளத்தில் இருக்கும் நம்பிக்கையே அவர்களுக்கு இந்த வலிமையை கொடுக்கிறது. ஆனால், ஒரு இந்துவின் மனத்தில் இத்தகைய நம்பிக்கை ஏற்பட இடமில்லை. மற்ற இந்துக்கள் தமக்கு உதவி செய்ய வருவார்கள் என்று அவர் நம்ப முடியாது. தாம் ஒருவராக இருப்பதனாலும் துணையின்றித் தனியாய் நிற்பதே தமது விதியாகி விட்டதாலும் அவர் சக்தியற்றவராகி விடுகிறார். பயத்துக்கும் கோழைத்தனத்துக்கும் உள்ளாகிறார். சண்டை என்று வந்தால் சரணடைகிறார், அல்லது ஓடி ஒளிந்து கொள்கிறார். சீக்கியரோ முஸ்லீமோ தாம் ஒருவராக நின்றாலும் தனியாக இல்லை என்ற உணர்வுடன் இருப்பதால் பயமின்றி எதிர்த்து நின்று போரிடுகிறார். இந்த நம்பிக்கை இருப்பதால் இவர்கள் தைரியமாக எதிர்த்து நிற்கிறார்கள். இந்த நம்பிக்கை இல்லாததால் இந்த...
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.