பெண்களையும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப் போகிறார்களா? அல்லது அவர்கள் தங்கள் கணவர்களின் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? கணவனின் வகுப்பிலேயே மனைவி சேர்க்கப்பட்டால், சதுர்வர்ண முறையின் அடிப்படைக் கோட்பாடு அதாவது ஒருவரின் தகைமையைப் பொறுத்து அவரது வகுப்பு அமையும் என்ற கோட்பாடு என்னவாகும்? தகைமையின்படி வகுப்புப் பிரிவினை அமையும் என்றால் அது பெயரளவில் மட்டும் இருக்குமா, உண்மையானதாக இருக்குமா? பெயரளவில் மட்டும் இருந்தால் அது பயனற்றது; எனவே சதுர்வர்ணமுறை ஆதரவாளர்கள் அது பெண்களுக்குப் பொருந்தாது என்று ஒப்புக் கொள்ள வேண்டும். உண்மையானது என்றால்,
...more

