மத மாற்றத்திற்குச் சாதி என்பது ஒத்து வராதது. நம்பிக்கைகளையும், மதக்கோட்பாடுகளையும் புகுத்துவது மட்டும் மதமாற்றத்திற்குப் போதுமானதாகாது. மதம் மாறியவர்களுக்குச் சமூக வாழ்வில் ஒரு இடத்தை உறுதிசெய்வதுதான் முக்கியமான பிரச்சினை. மதம் மாறி வந்தவர்களுக்குச் சமூக வாழ்வில் எங்கு இடமளிப்பது, எந்த சாதியில் சேர்ப்பது என்பதுதான் அந்த பிரச்சினை. பிற மதத்தவர்களைத் தம் மதத்திற்கு மாற்ற விரும்பும் எந்த ஒரு இந்துவையும் குழப்புகின்ற பிரச்சினை இதுதான். மன்றங்களில் எவர் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆவது போல சாதிகளில் எவர் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகிவிட முடியாது. சாதி சட்டதிட்டங்களின்படி எந்த ஒரு சாதியிலும்
...more

