பலாய்கள் இந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்தார்கள். எனவே, இந்துக்கள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கிராமத்துக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது எனப் பலாய்களைத் தடுத்தனர். அவர்களுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்வதைத் தடுத்தனர். பலாய்களின் விளைநிலம் இந்துக்களுக்குச் சொந்தமான நிலங்களுக்கு நடுவில் இருந்தால் அவற்றின் வழியே பலாய் தன் நிலத்திற்குச் செல்ல விடாமல் பலாய்கள் தடுக்கப்பட்டனர். அவர்களின் நிலங்களில் விளைந்த பயிர்களை இந்துக்கள் தங்கள் கால்நடைகளை விட்டு மேயச் செய்தனர்.

