சாதி இருக்கும் வரை ‘சங்கடன்’ (சங்காந்தம்) ஏற்பட முடியாது. ‘சங்கடன்’ ஏற்படாதவரை இந்துக்கள் பலவீனமும் பணிந்த சுபாவம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இந்துக்கள், தாங்கள் மிகவும் சகிப்புத் தன்மை கொண்டவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். உண்மையில் இது தவறான கருத்தாகும். பல சமயங்களில் அவர்கள் சகிப்புத் தன்மை இல்லாதவர்களாகவே நடந்து கொள்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் சகிப்புத் தன்மை காட்டினால் அதற்கு அவர்களின் பலவீனமே காரணம். அல்லது எதிர்ப்பதில் அக்கறை இல்லை என்பது காரணமாகும். இது இந்துக்களின் சுபாவத்திலேயே ஊறிப் போய் விட்டது. அதனால் அவர்கள் அவமதிப்பையும் தீங்கையும் எதிர்ப்பின்றிச் சகித்துக்
...more

