சதுர்வர்ண முறையில் ஒரு பிரிவில் இருப்பவர்கள் அத்துமீறி இன்னொரு பிரிவில் நுழைய முயலும் பிரச்சினை நிரந்தரமாக இருந்துவரும். இப்படி நுழைபவர்களுக்கு தண்டனை இருந்தாலன்றி, மனிதர்கள் தங்கள் தங்கள் பிரிவிலேயே கட்டுப்பட்டு இருந்துவிட மாட்டார்கள். ஏனென்றால் அது மனித இயல்புக்கு முரணானது. சதுர்வர்ண முறையைச் சட்டத்தின் மூலமே நடைமுறைப்படுத்த முடியும். தண்டனை ஏற்பாடு இல்லாமல் சதுர்வர்ண லட்சியத்தை அடைய முடியாது என்பதை ராமாயணத்தில் ராமன், சம்புகனைக் கொன்ற கதை நிரூபிக்கிறது.

