இந்த நம்பிக்கைக்கு எதிராகத்தான் நான் இவ்வளவு தூரம் பேசி வந்திருக்கின்றேன். மத சம்பிரதாயப் புனிதம் விஞ்ஞான அடிப்படையில் அமைந்தது என்றோ, மத சம்பிரதாயங்களுக்கு எதிராகப் பேசும் சீர்திருத்தவாதிகளுக்கு உதவுவதற்காகவோ அல்ல நான் பேசியது. பிரசாரம் செய்வதால் சாதிமுறை தோன்றி விடாது; தோன்றிய சாதிமுறை பிரச்சாரத்தால் அழியவும் முடியாது. மத சம்பிரதாயப் புனிதத்தை விஞ்ஞான விளக்கத்திற்கு நிகராக வைக்கும் போக்கு எவ்வளவு தூரம் தவறானது என்பதைத் தெரிவிப்பதே என் நோக்கமாகும்.

