வார்த்தைச் சாலங்கள் செய்வதில் பயனில்லை. சாஸ்திரங்களை இலக்கணப்படி வாசித்து தர்க்கரீதியான முறையில் பொருள் கொண்டால் அவற்றின் அர்த்தம் நாம் நினைப்பதுபோல இல்லை என்று விளக்கிக் கொண்டிருப்பது பயனற்றது. சாஸ்திரங்களை மக்கள் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். புத்தர் செய்ததுபோல, குருநானக் செய்தது போல நீங்கள் செயல்படவேண்டும். சாஸ்திரங்களைப் புறக்கணித்தால் மட்டும் போதாது. அவற்றின் அதிகாரத்தையே மறுக்க வேண்டும்.

