லாகூரில் நடக்க இருந்த ஜாத்-பட்-தோடக் மண்டலுக்காக நான் தயாரித்த இந்த உரை இந்துக்களிடையே வியக்கத்தக்க வகையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களை மனத்திலிருத்தியே தயாரித்த இந்த உரை 1500 பிரதிகள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இரண்டே மாதங்களில் தீர்ந்து விட்டது. தமிழிலும், குஜராத்தியிலும் இந்த உரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மராத்தி, இந்தி, பஞ்சாபி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது.

