சூத்திரர்கள் செல்வம் சேர்க்கும் சிரமத்தை ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்கு ஆதரவாக மூன்று வர்ணங்கள் இருக்கின்றனவே என்று அவர்கள் கூறுகிறார்கள். சூத்திரர் கல்வி கற்கும் சிரமத்தை ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும்? ஏதேனும் எழுதப் படிக்க அவசியம் ஏற்பட்டால் பிராமணரிடம் சென்று அதைச் செய்து கொள்ள முடியுமே? சூத்திரர் ஏன் ஆயுதம் தாங்குவது பற்றிக் கவலைப்படவேண்டும்? அவரைப் பாதுகாக்கத்தான் க்ஷத்திரியர் இருக்கிறாரே.

