இந்தப் பழக்கவழக்கங்களைப் பாராட்டிப் பிரபலமாக்குவதற்குத் தத்துவங்கள் தோன்றின. இந்தப் பழக்கவழக்கங்கள் கள்ளங் கபடமற்றவர்களின் நியாய உணர்வுக்கு வெறுக்கத்தக்கதாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்து வந்திருக்க வேண்டும். எனவே கசப்பான மாத்திரையை இனிப்பு கலந்தும் கவர்ச்சியான முலாம்பூசியும் கொடுப்பது போல இந்தப் பழக்கவழக்கங்களைப் பரப்புவதற்குத் தத்துவங்கள் தேவைப்பட்டன. இந்தப் பழக்கவழக்கங்கள் அடிப்படையில் சாதாரண வழிமுறைகளே (means); ஆனால் அவை சீரிய இலட்சியங்கள் (ideals) எனக் காட்டப்பட்டன.

