மனிதர்கள் அனைவரையும் ஒரு சில வகுப்புகளில் அடக்கி வகைப்படுத்துவது, பரிசீலிக்கவே தகுதியில்லாத மேலெழுந்தவாரியான கருத்து என்பதை நவீன விஞ்ஞானம் எடுத்துக் காட்டியிருக்கிறது. எனவே பல்வேறு விதமான தன்மைகள் கொண்ட மனிதர்களை, ஒரு சில வகுப்புகளாக வகைப்படுத்தி வைப்பதன் மூலம் ஒவ்வொரு தனி மனிதனின் தனித்திறன்களைப் பயன்படுத்துவது இயலாமற் போகிறது. பிளேட்டோவின் குடியரசு தோல்வியடைவதைப் போலவே சதுர்வர்ண முறையும் தோல்வியே அடையும். மனிதர்களை ஒரு சில வகுப்புகளாகப் பிரித்து அஞ்சறைப் பெட்டியில் போடுவது போலப் போட்டு விட முடியாது என்பதுதான் இதற்குக் காரணம். ஆரம்பத்தில் நான்கு வகுப்புகளாக இருந்தவை இப்போது நாலாயிரம்
...more

