சாதியிலுள்ள நீதிநெறி, மத மற்றும் சமூகக்கோட்பாடு ஆகியவற்றை வலுவாய் எதிர்க்கின்ற எந்தப் புதுமையையும் சாதி சிறிதளவும் சகித்துக் கொள்ளாது. அவ்வாறே சாதியை எதிர்த்து நிற்கும் சாதியின் உறுப்பினர்கள் சாதியிலிருந்து வெளியேற்றப்படும் ஆபத்துக்குள்ளாவார்கள். அவ்வாறு வெளியேற்றப்படுபவர்களை மற்ற சாதிக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; தங்கள் சாதிக்குள் இணைத்துக் கொள்ளவும் மாட்டார்கள்; அவர்கள்

