வடஇந்திய, மத்திய இந்திய பிராமணர்கள் தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் உள்ள பிராமணர்களைவிட சமூக அந்தஸ்தில் மிகவும் கீழான நிலையில் இருக்கிறார்கள். வடஇந்திய, மத்திய இந்திய பிராமணர்கள் சமையற்காரர்களாகவும், தண்ணீர் எடுப்போராகவும் மட்டுமே இருக்கிறார்கள். தக்காண, தென்னிந்திய பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றிருக்கிறார்கள். வட இந்தியாவில் உள்ள வைசியர்களும் காயஸ்தர்களும் அறிவு வளர்ச்சியிலும் சமூகஅந்தஸ்திலும் தக்காண, தென்னிந்திய பிராமணர்களுக்குச் சமமாக இருக்கிறார்கள்.

