என் மாகாணத்தில் கோலக் பிராமணர்களும், தியோருக பிராமணர்களும், கரட பிராமணர்களும், பால்சி பிராமணர்களும், சித்பவன் பிராமணர்களும் தங்களைப் பிராமணசாதியின் உட்பிரிவுகள் எனக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் இவர்களுக்கு இடையிலேயும் சாதி வெறுப்பும், வேறுபாடும் உள்ளது. பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதோருக்குமிடையே எந்த அளவுக்குக் குறிப்பிடத்தக்கதாகவும், கொடூரமானதாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு இந்தப் பிராமணர் உட்பிரிவுகளுக்குள்ளும் காழ்ப்புணர்ச்சி இருந்து வருகின்றது.

