திரு.காந்திக்கு மட்டும் நான் பதில் அளித்துள்ளேன். இவ்வாறு நான் அவருக்குப் பதில் அளித்துள்ளதால் அவர் கூறியுள்ளவை மிக முக்கியமானவை என்று பொருளாகாது. இந்துக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக மதிப்பதோடு அவர் வாய் திறந்தால் பிறர், தம் வாயை மூடிக் கொள்ள வேண்டும், தெருவில் போகும் நாயும் குரைக்கக் கூடாது என்ற அளவுக்கு அவருடைய சொற்கள் போற்றப்படுவதனாலேயே இதைச் செய்துள்ளேன்.

