இந்துமதம் ஒரு மிஷனரி மதமாக - சமயப் பரப்புப் பணி மேற்கொண்ட மதமாக - இருந்ததா இல்லையா என்பது வாதத்திற்குரியது. இந்துமதம் எப்போதும் ஒரு மிஷனரி மதமாக இருந்ததில்லை என்பாரும் இருந்தது என்பாரும் உள்ளனர். இந்துமதம் ஒரு காலத்தில் மிஷனரி மதமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அது மிஷனரி மதமாக இருந்திராவிட்டால் இந்தியாவெங்கும் இந்த அளவுக்கு பரவி இருக்க முடியாது. ஆனால் இன்று இந்துமதம் மிஷனரி மதமாக இல்லை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மை. எனவே, இந்துமதம் மிஷனரி மதமாக இருந்ததா இல்லையா, என்பதல்ல பிரச்சினை. அது ஏன் சமயத்தைப் பரப்பும் பணியில் நீடிக்க முடியவில்லை என்பதுதான் பிரச்சினை.
...more

