இவர்கள் பெற்றுள்ள இவ்வளவு நாகரிக வளர்ச்சிக்கும் மத்தியில் நாகரிகமற்ற மக்கள் நாகரிகமற்றவர்களாகவே நீடிப்பதை எந்தவித வெட்கமோ வேதனையோ, மனச்சான்றின் உறுத்துதலோ இல்லாமல் இந்துக்கள் அனுமதித்திருப்பதற்குக்காரணம் சாதி என்பதுதான் சரியான விளக்கமாகும். பழங்குடியினரின் இந்த நிலைமை எப்படி உள்ளுக்குள்ளே செயற்படும் அபாயத்திற்கு இடமாக உள்ளது என்பதை இந்துக்கள் உணரவே இல்லை. இவர்கள் இப்படியே நாகரிகமற்றவர்களாக நீடித்தால் இந்துக்களுக்கு இவர்களால் எவ்வித இடைஞ்சலும் இருக்காது. ஆனால் இந்துவல்லாத மதத்தவர்கள் இவர்களை மீட்டுத் திருத்தித் தம் மதத்தில் சேர்த்துக் கொண்டால் இந்துக்களின் பகைவர்கள் தொகை பெருகிவிடும்.
...more

