சமூகவியலார் கூறும் ‘குழு உணர்வு’ இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்றாகும். நாம் அனைவரும் இந்துக்கள் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை. ஒவ்வொரு இந்துவிடத்திலும் இருக்கும் உணர்வு தன் சாதி உணர்வு மட்டும்தான். இதனால் இந்துக்களை ஒரு சமூகமாகவோ அல்லது நாடாகவோ கொள்ள முடியவில்லை. அவர்கள் தமக்கென ஒரே சீரான வடிவமற்ற மக்கள் கூட்டமாகவே உள்ளனர்.

