முகம்மதியர்கள் ஆயுதபலத்தைக் காட்டி அவர்களின் மதத்தைப் பரப்பியதாக இந்துக்கள் குறை கூறுகின்றனர். கர்த்தரை விசுவாசிக்காதவர்களைக் கிறிஸ்தவர்கள் சித்திரவதை செய்தார்கள் என்று இந்துக்கள் ஏளனம் செய்கிறார்கள். ஆனால் இவர்களில் நல்லவர்கள் எந்த மதத்தினர்; நம் மரியாதைக்குரியவர்கள் எந்த மதத்தினர்? மோட்சத்தை அடையும் வழி என்று எதைத் தங்கள் முழுமனதோடு நம்பினார்களோ அதைப் பின்பற்றுமாறு, விருப்பமில்லாத மக்களாக இருந்தபோதிலும் அவர்களைக் கட்டாயப்படுத்தியது கிறிஸ்தவர்களும் முகம்மதியர்களுமா? அல்லது அறிவு ஒளியை மற்றவர்கள் அடையமுடியாதவாறு மறைத்தவர்களும், அறியாமை என்னும் இருட்டறையில் மக்கள் தொடர்ந்து மூழ்கிக்
...more

