சாதி என்பது நடைமுறையில் மட்டுமல்லாது, எல்லா வகையிலும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரு பிரச்சினை, சாதி பற்றிய கோட்பாட்டு அடிப்படைகள் குறித்து எனக்குள் எழுந்த ஆர்வமே சாதி குறித்த சில முடிவுகளையும் இந்த முடிவுகளுக்குத் துணை நிற்கின்ற ஆதாரங்களையும் உங்கள் முன் வைக்கத் தூண்டியது. ஆனால் அவை முற்றிலும் சரியானவை, முடிவானவை என்றோ அல்லது பிரச்சினைக்கு விளக்கமளிப்பதற்கு அதிகம் சொல்லிவிட்டதாகவோ கருதவில்லை.

