சமூகச் சீர்திருத்தம் என்றால் இந்துக் குடும்பத்தைச் சீர்திருத்துவதா அலலது இந்து சமுதாயத்தைச் சீர்திருத்திப் புத்தாக்கம் செய்வதா என்னும் வகைப்படுத்தி இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். முதலாவதாகக் கூறப்பட்ட சீர்திருத்தம் விதவை மறுமணம், குழந்தை மணம் ஆகியவற்றோடு தொடர்புடைய குடும்பச் சீர்திருத்தம் சார்ந்தது. இரண்டாவதாகக் கூறப்பட்ட சீர்திருத்தம் சாதி அமைப்பை ஒழிப்பது தொடர்புடைய சமூகச் சீர்திருத்தம் சார்ந்தது.

