எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் அவளை விதவையாக்கி வற்புறுத்தி வைப்பது. பிற விளைவுகளைக் கருதிப் பார்க்கும்போது, விதவையாக வைத்துக் கொண்டிருப்பதை விட அவளை எரித்து விடுவதே நல்ல தீர்வாக அமையும். எரித்து விடுவதால் மூவகைக் கொடுமைகளிலிருந்து அவளை விடுவிக்கலாம். அவள் இறந்தொழிந்து போவதால் தன் சாதிக்கு உள்ளேயோ வெளியேயோ மறுமணம் புரிந்து கொள்ளக் கூடிய பிரச்சினை தீர்ந்து போகிறது. ஆனால் அவளைக் கட்டாயப்படுத்தி விதவையாக வைத்திருப்பது எரித்து விடுவதைவிட மேலானது. காரணம் எரித்தொழிப்பதை விட அதுவே நடைமுறைக்கு ஏற்றது. மனிதத் தன்மையுடையது. எரித்துவிடுவதை ஒத்த விதவைக்கோலம் மறுமணத்தினால் ஏற்படும் கொடுமை களிலிருந்து அவளைக்
...more

