ஒரு கூட்டத்தார் மற்றவர்களோடு கலவாமல் தனித்தும் ஒதுங்கியும் வாழ்கிறார்கள் என்றும், அந்தக் கூட்டத்தாரிடம் சமூக நேச உணர்வு இல்லை என்றும் இந்துக்கள் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்கின்றனர். ஆனால் இந்த சமூக நேச உணர்வின்மை அவர்களுடைய சாதிமுறையின் இழிவான தன்மை என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். கடந்த உலகப்போரின் போது ஜெர்மானியர்கள் ஆங்கிலேயரை எந்த அளவுக்கு வெறுத்து வசைபாடினார்களோ அதே அளவில் ஒவ்வொரு சாதியினரும் பிற சாதியாரை வெறுத்து வசைபாடி மகிழ்கின்றனர். இந்துக்களின் இலக்கியங்களில் மலிந்து கிடக்கும் சாதி வழிமுறைப் பட்டியல் கதைகளில் ஒரு சாதிக்கு உயர்வான பிறப்பிடமும் பிற சாதிகளுக்கு இழிவான பிறப்பிடமும்
...more

