இந்திய வரலாற்றிலேயே சுதந்திரமும் பெருமையும் புகழும் மிகுந்து விளங்கிய ஒரே காலம் மௌரியப் பேரரசின் காலம்தான். மற்ற எல்லாக் காலங்களிலும் நாடு தோல்வியிலும் இருளிலும் தவித்தது. மௌரியர் காலத்தில்தான் சதுர்வர்ணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. நாட்டு மக்களில் பெரும்தொகையினரான சூத்திரர்கள் உரிமை பெற்று நாட்டின் ஆட்சியாளர்கள் ஆனார்கள். சதுர்வர்ணம் தழைத்திருந்த காலம்தான் நாட்டில் தோல்வியும் இருளும் சூழ்ந்து நாட்டு மக்களின் பெரும்பகுதியினர் அவல வாழ்க்கையில் தள்ளப்பட்டனர்.

