இந்து சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ள பிராமணர்களே மேற்கூறிய இந்தப் பழக்கவழக்கங்களைக் கண்டிப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் கடைப்பிடிக்கின்றனர். பிராமணர்களைப் பார்த்து, பிராமணர் அல்லாத பிற சாதியினரும் இந்தப் பழக்க வழக்கங்களைப் பரவலாகப் பின்பற்றியபோதிலும் அவர்கள் கண்டிப்பாகவும் முழுமையாகவும் இவற்றைப் பின்பற்றுவதில்லை.

