இந்தியாவில் உள்ள நாலாயிரம் சாதிகளுக்குப் பதிலாக இந்த நான்கு வகுப்புகள் இருக்கவேண்டும் என்னும் இந்தக் கொள்கை மக்களுக்குக் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கவேண்டும் என்பதற்காகவும், இதற்கு எதிர்ப்புகளை மழுங்கச் செய்வதற்காகவும் தாங்கள் கூறும் சதுர்வர்ணம் பிறப்பால் அமைவது அல்ல என்றும், குணத்தை அல்லது தகைமையை அடிப்படையாகக் கொண்டது என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

