தத்துவங்களுக்கும் விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு காரணமாக அவற்றின் அடிப்படையில் செய்யப்படும் செயல்களின் தரமும் தன்மையும் வேறுபடுகின்றன. நல்லது என்று சொல்லப்படுவதை ஒரு விதியின் காரணமாகச் செய்வதற்கும், தத்துவத்தின் அடிப்படையில் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தத்துவம் தவறாக இருக்கலாம். ஆனால் அதன் அடிப்படையில் செய்யப்படும் செயல் உணர்வுடனும் பொறுப்புடனும் செய்யப்படுகிறது. விதி சரியானதாக இருக்கலாம். ஆனால் அதைப் பின்பற்றும் செயல் யந்திரத்தனமானது. ஒரு மதச் செயல் சரியானதாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம், பொறுப்புடன் செய்யப்படுவதாகவேனும் இருக்க வேண்டும். இவ்வாறு பொறுப்புடன் செய்யப்பட
...more

