சாதியின் இரு இயல்புகளாகக் கலப்பு மணத் தடையையும், தான் பிறந்த குழுவின் வழியிலான உறுப்பினராகும் தன்மையையும் அவர்முன் வைக்கின்றார். ஆயின் இவை இரண்டும் ஒரே பொருளின் இரு தன்மைகள் எனக் கூற விரும்புகின்றேன். அதாவது, அவர் கூறுவது போல இவ்விரு தன்மைகளும் இரு வேறு நாணயங்கள் போன்றவை அல்ல, ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை என்பேன். கலப்பு மணத் தடையின் விளைவாக ஒரு குழுவிற்குள் பிறந்தார்க்கே உறுப்பினராகும் உரிமை என்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் இவ்விரு இயல்புகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன.

