பிராமணர்களுக்கு மிக அருகில் நெருங்கியுள்ள சாதியினர் மேற்கூறிய மூன்று பழக்கவழக்கங்களை பார்த்து ஒழுகுவதோடு கண்டிப்பாகப் பின்பற்றுவதை வலியுறுத்துகின்றனர். ஓரளவு நெருங்கியுள்ள சாதியினர் கட்டாய விதவைக் கோலத்தையும் பேதை மண வழக்கத்தை மட்டுமே மேற்கொண்டனர். பிராமணர்களிடமிருந்து வெகுதூரம் விலகி நின்றவர்கள் சாதி பற்றிய நம்பிக்கையை மட்டுமே கொண்டனர். பார்த்துப் ‘போலச் செய்தல்’ முறைகளில் இவ்வாறு மாறுபாடுகள் இருப்பதற்குக் காரணம் ஒன்று டார்ட் கூறுவது போல இடைவெளிதூரம், மற்றொன்று இந்தப் பழக்கவழக்கங்களின் காட்டுமிராண்டித் தனமான இயல்பு.

