இந்து மதத்திலிருந்து வெளியேறத் தாங்கள் முடிவு செய்து விட்டதாகவும், ஒரு இந்துவாக இருந்து ஆற்றும் கடைசி உரையாக இது இருக்கும் என்றும் அதில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள். வேதங்கள் முதலிய இந்து நூல்களின் அறத்தன்மையையும் அறிவார்ந்த தன்மைகளையும் தேவையின்றிக் கண்டித்துள்ளீர்கள்;

