இந்த விதமாகப் பார்த்தால் சதுர்வர்ண இலட்சியத்துக்கும் பிளேட்டோ கூறும் லட்சிய சமூகத்துக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை இருக்கிறது. பிளேட்டோவின் கருத்துப்படி மனிதர்கள் இயற்கையில் மூன்று பிரிவுகளாக இருக்கிறார்கள். சிலமனிதர்களிடம் பசியே முதன்மையாக இருக்கிறது என்று அவர் கருதினார். இந்த மனிதர்களை அவர் உழைப்பாளிகள், வியாபாரிகள் என்ற பிரிவில் சேர்த்தார். மற்றும் சிலரிடம் பசியுடன் வீரமும் இருப்பதாக அவர் கருதினார். இந்த மனிதர்களை, போரில் நாட்டைக் காப்பவர்கள், உள்நாட்டில் அமைதியைக் காப்பவர்கள் என்று அவர் வகைப்படுத்தினார். வேறு சிலர் எல்லாவற்றிலும் அடிப்படையாக அமைந்துள்ள உண்மைகளை உணர்ந்தறியும் திறன்
...more

