சிறிது காலம் காங்கிரசும் சமூக மாநாடும் (Social Conference) ஒரே பொதுமுயற்சியில் இரு பிரிவுகளாகப் பணியாற்றியதோடு அவற்றின் ஆண்டு மாநாடுகள் ஒரே பந்தலில் இடம்பெற்று நடந்தன. எனினும் இவ்விரு பிரிவுகளும் விரைவில் அரசியல் சீர்திருத்தக் கட்சி எனவும், சமூகச் சீர்திருத்தக் கட்சி எனவும் இரு கட்சிளாகப் பிரிந்ததோடு அவற்றிற்கிடையே கடுமையான கருத்து முரண்பாடுகளும் தோன்றின.

