போப் ஏன் இந்தச் சீர்திருத்தத்தை அல்லது அந்தச் சீர்திருத்தத்தைச் செய்யாமலிருக்கிறார் என்று மக்கள் சில சமயங்களில் வீண் கேள்வி கேட்கிறார்கள். இதற்கு விடை புரட்சிக் கருத்துக் கொண்ட ஒரு மனிதர் போப் ஆக மாட்டார், அல்லது, போப் ஆகிறவர் புரட்சிக்காரராக விரும்ப மாட்டார் என்பதே.” இந்தக்கருத்து இந்தியாவின் பிராமணர்களுக்கும் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். போப் ஆகிற ஒரு மனிதர் புரட்சிக்காரர் ஆக விரும்பமாட்டார் என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல பிராமணராகப் பிறந்த ஒருவர் புரட்சிக்காரராக விரும்பமாட்டார் என்பதும் உண்மை.

