ஆயுதம் ஏந்த அவர்களுக்கு உரிமை இல்லை. ஆயுதம் இல்லாததால் அவர்கள் கிளர்ச்சி செய்ய முடியவில்லை. இவர்கள் எல்லோரும் ஏர் பிடிக்கும் உழவர்களாயிருந்தார். அல்லது அவ்வாறு இருக்குமாறு வைக்கப்பட்டார்கள். ஏரின் கொழுமுனையை வாள் முனையாக மாற்ற அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களிடம் துப்பாக்கி ஈட்டி முனை இல்லை. எனவே யார் வேண்டுமானாலும் அவர்கள் மீது சவாரி செய்யமுடிந்தது. சதுர்வர்ண முறையில் அவர்கள் கல்வி கற்க முடியவில்லை. எனவே அவர்கள் தாங்கள் மீட்சி பெறும் வழியை அறியவோ அதுபற்றிச் சிந்திக்கவோ முடியாமற்போயிற்று. தாழ்ந்த நிலையிலேயே உழல்வது அவர்களது விதியாக்கப்பட்டது. அதிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாமலும் அதற்கான
...more

