அறிவுத்திறன் கொண்ட ஒருமனிதன் என்ன குறிக்கோளை அடைய விரும்புகிறான் என்பதைப் பொறுத்தே அதை அவன் எப்படிப் பயன்படுத்துவான் என்பது அமையும். அவன் நல்லவனாக இருக்கலாம். அதேபோல கெட்டவனாகவும் இருக்கமுடியும். அவ்வாறே அறிவுத்திறன் வகுப்பும் உயர்ந்த நோக்கமும், உதவும் எண்ணமும், மனிதகுலத்தைத் தவறுகளிலிருந்து காத்து நல்லவழியில் சேர்க்கும் தன்மையும் கொண்ட சான்றோர்களின் குழுவாகவும் இருக்கலாம். அல்லது ஒரு அயோக்கியர் கும்பலாகவோ தனக்கு ஆதரவளிக்கும் ஒரு குறுகிய கோஷ்டியின் நலன்களுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டமாகவோ இருக்கக்கூடும்.

