லட்சிய சமூகம் எப்போதும் இயங்கிக் கொண்டு, தொடர்புகளும் பரிவர்த்தனைகளும் நடந்துகொண்டு இருக்கவேண்டும். சமூகத்தின் ஒரு பகுதியில் ஏற்படும் மாற்றங்களை மற்றப் பகுதிகளுக்குத் தெரிவிப்பதற்குப் பல்வேறு மார்க்கங்கள் இருக்கவேண்டும். மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பல்வேறு வகையான நலன்களைப் பகிர்ந்துகொண்டு பரிவர்த்தனை செய்துகொண்டும் வாழவேண்டும். பல்வேறு விதமான கூட்டு வாழ்க்கை முறைகளுக்குமிடையே தாராளமான தொடர்புகளுக்கு நிறைய வாய்ப்பு இருக்க வேண்டும். வேறு விதமாகச் சொன்னால் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலும் மக்கள் தாராளமாகக் கலந்து உறவாடும் நிலை இருக்கவேண்டும். இதுதான் சகோதரத்துவம். ஜனநாயகத்தின்
...more

