ஆனால் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும் நான் இதை எதிர்க்கவில்லை. எனது எதிர்ப்புக்கு வலுவான காரணங்கள் உள்ளன. இந்த அமைப்பு முறையை நான் நுட்பமாக ஆராய்ந்திருக்கிறேன். ஒரு சமூக அமைப்பு என்ற முறையில் சதுர்வர்ணம் நடைமுறை சாத்தியமற்றது. தீமை நிறைந்தது. இழிந்த தோல்வி கண்டது என்று நிச்சயமாக நம்புகிறேன். சதுர்வர்ண அமைப்பு முறை நடைமுறையில் பற்பல இடர்பாடுகளை எழுப்புவதை இதன் ஆதரவாளர்கள் கவனிக்கவில்லை. சாதியின் அடிப்படைத் தத்துவம் வேறு; வர்ணத்தின், அடிப்படைத் தத்துவம் வேறு. இவை வேறானவை என்பது மட்டுமின்றி ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. வர்ணம், தகைமையை அடிப்படையாகக் கொண்டது. அப்படியானால், தகைமையால் அன்றி
...more

