அந்த அணியைச் சார்ந்தோர் பெரும்பான்மையினர் கல்வி அறிவு பெற்ற உயர்சாதி இந்துக்களாகவே இருந்தனர். ஒவ்வொரு மேல் சாதி இந்துக் குடும்பத்திலும் கட்டாய விதவைக் கோலமும் கட்டாய குழந்தை திருமணக் கொடுமையும் இருந்ததால் அந்தத் தீமைகளை ஒழிப்பது சாதி ஒழிப்பை விட முக்கியமானது என அவர்கள் கருதி இந்து குடும்பச் சீர்திருத்தத்திலேயே கவனம் செலுத்தினர்.

