ஒருவேளை கிறிஸ்தவ மிஷனரிகள் பழங்குடியினருக்காகச் செய்யும் ஊழியங்களை இந்து ஒருவன் செய்ய விரும்புவதாக வைத்துக்கொள்வோம். அவனால் அதைச் செய்யமுடியாதா? முடியாது என்றே பணிவுடன் கூறுவேன். காரணம், இந்தப் பழங்குடி மக்களை நாகரிக மக்களாக ஆக்குவது என்றால் அவர்களோடு இணைந்து அவர்களை உறவினராக நடத்தவேண்டும். அவர்களுக்குள் ஒருவராகவே வாழவேண்டும்; தோழமை உணர்வை வளர்க்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் அவர்களை நேசிக்க வேண்டும். ஒரு இந்து இவற்றையெல்லாம் செய்வது சாத்தியப்படுமா? தன் சாதியைப் பேணிக் காப்பதே ஒரு இந்துவின் வாழ்க்கை இலட்சியம்; தன் சாதி என்பது ஒவ்வொரு இந்துவுக்கும் விலைமதிக்க வொண்ணாத பெரும் சொத்து;
...more

