ஆனால், செங்கற்பட்டுத் தீர்மானத்திற்குப் பிறகு வெளிநாட்டிலும், இந்தியாவிலும் பல இடங்களில் கல்யாண ரத்துச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ருசியாவில் கல்யாணமே தினசரி ஒப்பந்தம்போல் பாவிக்கப்பட்டு வருகின்றது. ஜெர்மனியில் புருஷனுக்கும் பெண் சாதிக்கும் இஷ்டமில்லையானால் உடனே காரணம் சொல்லாமலே கல்யாணத்தை ரத்து செய்துகொள்ளலாமென்பதாகச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

