சில வகுப்புகளில் தங்கள் இனத்தார் தவிர, மற்ற இனத்தாரிடம் சாவகாசம் செய்தால் மாத்திரம் விபச்சாரமாய்க் கருதப்படுகின்றது. நமது நாட்டிலும் சில வகுப்புகளிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மச்சாண்டார், கொழுந்தனார் (அதாவது புருஷன் சகோதரர்கள்) மாமனார் ஆகியவர்கள் சம்பந்தமானது விபச்சாரத்தனமாக கொள்ளப்படுவதில்லை. இக் கொள்கைகள் நம் நாட்டுப் பழங்குடி மக்கள் மிகுதியும் கொண்ட சில சமூகங்களின் பழக்க வழக்கங்களுடன் கலந்து செல்வாக்குப் பெற்றிருப்பதை இன்றும் தாரளமாய்ப் பார்க்கலாம்.

