இந்நிலை சட்டத்தாலும், மதத்தாலும் மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்வதற்கில்லாமல் பெண் சமூகமும், ஒப்புக்கொண்டு, இந்நிலைக்கு உதவி புரிந்து வருவதானாலும் இது உரம் பெற்று வருகிறதென்றே சொல்லவேண்டும். அநேக வருட பழக்கங்களால் தாழ்ந்த சாதியார் எனப்படுவோர் எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக்கொண்டு, தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும், விலங்கவும் முந்துகின்றார்களோ, அதுபோலவே, பெண் மக்களும் தாங்கள் ஆண் மக்களின் சொத்துகளென்றும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு, சுதந்திரத்தில் கவலையற்று இருக்கின்றார்கள். உண்மையாக, பெண்கள்
...more

